சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு "மனிதநேயத்திற்கான யோகா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்படும். மேலும், யோகா செய்வதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்பட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் நிர்மலா முன்னிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செவிலிய மாணவர்கள் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டனர். நேரு விளையாட்டு மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டனர்.
மேலும், கோவை சூலூர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தில் விமானப் படையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.

அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனை, தனியார் பள்ளி கல்லூரிகள், தனியார் அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
"மனிதநேயத்திற்கான யோகா" என்று கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.