கோவை பொள்ளாச்சியில் கின்னஸ் சாதனைக்காக தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்..!

அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும், விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் கின்னஸ் சாதனைக்காக தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கோபால் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் இவரது மனைவி கீதா இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் பிரணவ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கீதா சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு யோகா பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.

எனவே, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு பல்வேறு விதமான யோகா ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார்.



கடந்த 8-ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீரில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், உடல் வலி இருக்காது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு நிலை படுத்தி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே,அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும்,விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கீதா தெரிவித்தார்.

இளம்பெண் கீதாவின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...