கோவை ஆர்.எஸ்.புரத்தில் கத்தியை வைத்து அட்டூழியம் செய்த இளைஞரை பிடிக்க சென்ற காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்ற குற்றவாளியை, பிடிக்க சென்ற ஆர்.எஸ். புரம் முதல்நிலை காவலர் அஷ்ரப் திடீரென மயங்கினார். தொடர்ந்து வந்த காவலர்கள், குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர்.



கோவை: கோவையில் அடிதடி வழக்கில் கைது செய்ய சென்ற போது, போலீஸ் காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜீவா, நேற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே ஜீவா ஒருவரை கத்தியால் குத்தியதாக ஆர்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற இரண்டாம் நிலை காவலர் அஷ்ரப் என்பவர், ஜீவாவை பிடிக்க முயன்றார்.

அப்போது தீடீரென ஜீவா, காவலரை தள்ளிவிட்டு, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து, ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் பொழுது தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து, அவரை பிடிக்க சென்ற காவலரும் திடீரென மயங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின் தொடர்ந்து வந்த ஆர்.எஸ் புரம் போலீசார், மயங்கி விழுந்த காவலரை தண்ணீர் தெளித்து எழுப்பினர்.



பின்னர், தப்பித்துச் சென்ற ஜீவாவை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மயங்கி விழுந்த காவலர் அஷ்ரப் முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர், நலமுடன் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பி சென்ற குற்றவாளியை பிடிக்க சென்ற போது, காவலர் மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...