தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கேரளா அரசு கோவை சிறுவாணியில் கூடுதல் அளவு தண்ணீர் திறப்பு..!

49 எம்.எல்.டி. தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது 101 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக முதலமைச்சரின் கோரிக்கையினை ஏற்று கோவை சிறுவாணியில் கூடுதல் அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 101 எம்.எல்.டி. தண்ணீர் குடிநீர் தேவைக்காக கிடைக்கிறது.

சிறுவாணி அணையில் இருந்துதங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும், நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும், அதிகரிக்கவும் கேரளா அரசுக்குதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

இதனை அடுத்து கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீரை அதிகமாக திறந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களும் 100 வார்டுகளும் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 6500 தெருக்கள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. இது தவிர வேலைக்காக தினமும் வந்து செல்வோர்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோர் என சுமார் 10 லட்சம் பேர் உள்ளனர். கோவை மாநகரின் குடிநீர் தேவையை பில்லூர், சிறுவாணி அணைகள் பூர்த்தி செய்கின்றன.

இதில், கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.

அதிலும், குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையில் இருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர்மட்டத்தை மிக கணிசமாக குறைந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், அணையின் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சிறுவாணி அணையில் இருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவும்கேரளா அரசால் குறைத்து வழங்கப்பட்டது.

சிறுவாணியின் நீர்மட்டம் 15 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 100 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 50 மில்லியன் லிட்டர் ஆக குறைந்தது.

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மாநகராட்சி சார்பாக மாற்று திட்டம் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவாணி அணையில் இருந்துதங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும்,

நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும், அதிகரிக்கவும் கேரளா அரசுக்குதமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி மீண்டும் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் எடுக்க அணையில் இருந்து தண்ணீரை அதிகமாக திறந்துள்ளது.

இதுகுறித்துதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் (சிறுவாணி) கூறுகையில், தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் ஆய்வு கொண்டு அதிகாரிகளிடம் தெரிவித்ததன் காரணமாகவும், நேற்று இரவு முதல் சிறுவாணி அணையில் இருந்து கேரளா அரசு கூடுதலாக தண்ணீரை திறந்துள்ளது.

49 எம்.எல்.டி. தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது 101 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்," என்றார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...