12-ஆம் வகுப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்டத்தில் 100-சதவீதம் தேர்ச்சி..!

கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 98.78 % அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி - 100 %, வாய் மற்றும் காது மாற்றுத்திறனாளிகள் - 81.48 %, உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் - 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய33,737 மாணவ-மாணவிகளில் 32,695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில், 119 தேர்வு மையங்களில், பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இது தவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர்.

இதையடுத்து, பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக, கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மையங்களிலும் விடைத்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் - 96.91%, அதில் மாணவர்கள் - 95.58 %, மாணவிகள் - 98.05 %. மொத்தம் தேர்வு எழுதிய 33,737 பேரில் 32,695 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 98.78 % அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி - 100 %, வாய் மற்றும் காது மாற்றுத்திறனாளிகள் - 81.48 %, உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் - 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...