கோவையில் இயங்கும் தனியார் டாக்ஸியை (Red Taxi) ஊட்டியில் இயங்க உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் இயங்கும் தனியார் டாக்ஸியை ஊட்டியில் இயங்க ஊட்டி டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட தனியார் டாக்ஸி (Red Taxi) ஓட்டுநர் தங்களது வாகனங்கள் ஊட்டி செல்லும் போது அங்குள்ள உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை எனவும், தங்களது வாகனங்களை சேதப்படுத்துவதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவைக்கு வரும் பல்வேறு மாவட்டமற்றும் மாநிலங்களை சார்ந்த பொதுமக்கள் கோவையிலிருந்தே முழு சுற்றுக்கும் பதிவு செய்து விடுவர் என்றும், அவ்வாறு இருக்கும்போது பயணிகளை பாதியில் இறக்கி விட முடியாது என தெரிவித்தனர்.
மேலும், ஊட்டியில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் கோவையிலிருந்து செல்லும் போது, பரளியாறு அருகிலேயே தங்களைத் தடுத்து விடுவதாகவும், இழிவாக பேசுவதாகவும் சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.