மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட பாரதி பூங்கா பகுதியில் மக்கும் கழிவுகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை (Micro Composting Center) முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அறிவுறுத்தினார்.
கோவை: மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட சிந்தாமணி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட கிகானி சுரங்கபாதை பகுதியில் மழைநீர் தேங்குவதை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட பாரதி பூங்கா பகுதியில் மக்கும் கழிவுகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை (Micro Composting Center) முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அறிவுறுத்தினார்.
இதனிடையே, மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட பாரதி பூங்காவில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட பாரதி பூங்கா, ஜவகர் நகரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அப்பகுதியில் மரக்கழிவுகளால் ஏற்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட பாரதி பூங்காவை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், பூங்கா பராமரித்தல், பூங்காவில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.