கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை: கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின்(சிஐடியு) 15வது மாநில மாநாடு இன்று முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் முதல் நாள் துவக்க மாநாடு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், சாலைப் போக்குவரத்து சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சூழலியல், அரசியலமைப்புச் சட்டம், போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. நிகழ்வின் முன்னதாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.