பல்லடம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்.

இரண்டு கார்களும் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில், இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.








திருப்பூர்: கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து, பல்லடத்திற்கு மணவறை அலங்கார வேலைபார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், உடுமலையை சேர்ந்தமணி (55) மற்றும் அவரது மனைவிமீனாட்சி (51), அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் காரில் உடுமலையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பெரும்பாளி பகுதியில்

நேருக்குநேர்மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில்,இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரையும்மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து பல்லடம் போலீசார்வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...