இரண்டு கார்களும் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில், இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்: கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து, பல்லடத்திற்கு மணவறை அலங்கார வேலைபார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், உடுமலையை சேர்ந்தமணி (55) மற்றும் அவரது மனைவிமீனாட்சி (51), அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் காரில் உடுமலையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர்.
இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பெரும்பாளி பகுதியில்
நேருக்குநேர்மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில்,இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரையும்மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து பல்லடம் போலீசார்வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.