அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் BSNL-அலுவலகம் முற்றுகை போராட்டம்..!

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திவிக, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.



இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திவிக, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இத்திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறித்து ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் முயற்சி எனவும், பிரதமருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, மோடி அரசு பொய் பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததாகவும், இந்த அக்னிபத் திட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆட்களை திரட்டும் திட்டம் எனவும் இதற்கு ராஜ்நாத் சிங்கும் உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...