இவ்விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி 44.17 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி கடன்களை மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் முன்னோடி வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் மாநகராட்சி ஆணையர் மற்றும் முன்னோடி வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 44.17 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.
விழா மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ்.சமீரன் வங்கிகள் நினைத்தால் ஒரு இரவில் கூட கடனுதவியை தயார் செய்ய முடியும் அந்த நினைப்புடன் கண்டிப்பாக முனைப்போடு செயல்பட வேண்டும். ஒரு சில டெக்னிகல் பிரச்சினைகள் இருப்பதால் சிபில் ஸ்கோர் போன்ற காரணங்களால் வங்கிகள் மாணவர்களுக்கு கடன்கள் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.
அவருடைய தந்தையும் அல்லது பெற்றோர்களோ வேறு ஏதேனும் கடன் பெற்று அதன் பாதிப்பு காரணமாகவும், அவர்களுடைய கடன் இருப்பு காரணமாகவும் அவர்களுடைய மகன்களுக்கும் அல்லது மகளுக்கோ கல்விக்கடன் பாதிக்கப்படுகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அப்பா பெற்ற கடனுக்காக கல்வி என்ற தகுதியை தான் மகனோ அல்லது மகளோ அடமானமாக வைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளன நம் மாவட்டத்தில் 350 கோடி கட்டாயமாக கல்வி கடன் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடம் நான் வைத்துக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக அனைத்து வங்கிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனை நான் மனமார பாராட்டுகிறேன்.
இந்த நிதியாண்டில் கண்டிப்பாக தமிழகத்திலேயே அதிக கல்விக் கடன் கொடுத்த மாவட்டமாக வர வேண்டும் அதற்கு முன்னோடியாக இன்றைய தினம் 44.17 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். இன்னொரு பெரிய மேடையில் 100 கோடி கடன் கொடுப்பதற்கான திட்டம் தயார் செய்துள்ளோம். அமைச்சர் ஆலோசனைப்படி 350 கோடி கொடுக்க வேண்டும் 100 கோடி அளவிற்கு நீங்கள் தருவதற்கு தயாராக உள்ளீர்கள் என்ற ஒப்புதலை கொடுத்துள்ளோம்.
எனவே, அனைத்து வங்கி மேலாளர்கள் என்னுடைய மானத்தை காப்பாற்ற வேண்டும் நீங்கள் துணிந்து இறங்கினால் கண்டிப்பாக வேலை செய்ய முடியும். நீங்கள் முனைப்போடு செயல்படும் பட்சத்தில் நம்முடைய மாவட்டத்திற்கான இலக்கை அடைய முடியும் நான் சொன்னது போல் 100 கோடி கடன் ஒரு பெரிய மேடையின் கொடுக்க தயாராக இருந்தாள் முதல்வர் அவர்கள் தலைமையில் கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் இது மாணவ மாணவியரின் எதிர்காலம் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது எவ்வளவு பெரிய உதவிகரமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் ஒரு வாகனத்தின் ஸ்டார்டர் போலத்தான் நாம் கொடுக்க கூடிய இந்த கடன் அவர்கள் பெட்ரோல் போட முடியும். அந்த வாகனத்தை இயக்க முடியும் ஆனால், அதை ஸ்டார்ட் செய்வதற்கு தேவையான ஸ்டார்டர் போலத்தான் இந்த கல்விக்கடன் தயவுசெய்து உணர்வோடு முனைப்போடு வங்கிகள் செயலாற்ற வேண்டும். அதற்காக அனைத்து வங்கிகளும் முனைப்போடு செயல்பட வேண்டும் நானும் கல்விக் கடன் பெற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.