கோவை பொள்ளாச்சி அருகே இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற 2-பேர் கைது: 200-கிராம் கஞ்சா பறிமுதல்..!

பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டு 200-கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், வெள்ளாளபாளையத்தை செல்வராஜ் (38) என்பதும், மேலும், அவர் கஞ்சாவிற்பனை செய்வதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் உள்ள மதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த அனீஷ் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...