ஊராட்சி செயலாளர்களின் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உள்ளிட்டபல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,

தமிழகத்தில் பெரிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைஇரண்டாக பிரிக்க வேண்டும், வருவாய்த் துறையில் புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் தோற்றுவிப்பது போல், ஊரக வளர்ச்சித் துறையில் நிர்வாக வசதிக்காக புதியஊராட்சி ஒன்றியங்கள் துவக்கப்பட வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன், உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த, வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களின்பல ஆண்டுகள்கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களைத் தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.