குட்கா பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட750-கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் 2.0 செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சில்லறை விற்பனைக்காகக் கடைகளுக்கு சில மர்ம நபர்கள் கொடுத்து வருவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் அத்திப்பாளையம் சந்திப்பு அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு கடைக்கு இளைஞர் ஒருவர் குட்கா பொருட்களை வழங்குவதை போலீசார் நோட்டமிட்டனர்.
இதையடுத்து, விரைந்து சென்று அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவரது காரை போலீசார் சோதனையிட்ட போது அதில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இவர் தனது நண்பர்களானராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபால் குமார் (24), ஜெகதீஷ் பட்டேல்,பரத் பட்டேல்ஆகியோருடன் சேர்ந்து மளிகைக் கடைகளை குறிவைத்து குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சரவணம்பட்டி அருகே உள்ள குமரகுரு நகர் அருகே குடோன் வைத்து அங்கிருந்த குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் குட்கா விற்பனைக்கு தொடர்பு கொள்ள மட்டும் வைத்து இருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.