கல்விக் கடன் பெறுவதில் சிரமமா? உடனடியாக மாவட்ட ஆட்சியரை அணுகலாம்- கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால், கல்வி நிறுவனங்கள் மூலம் அணுகலாம் இல்லை மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்வி கடன் பெறலாம் என தெரிவித்தார்.



கோவை: கோவை கொடிசியா தொழிற் கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் மாணவ மாணவியருக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 293 மாணவ மாணவியருக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல்வர் கோவை மாவட்டத்தில் கல்வி கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் என்றும்இன்று293 மாணவ மாணவிக்கு 44 கோடி ரூபாய் கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன் வழங்க ஏற்பாடு இலக்கு செய்துள்ளது. வரும் 30 நாட்களில் 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்க உள்ளது எனவும், எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சனையால் கல்விக் கடன்களை வழங்காமல் இருக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னோடி வங்கிகள் விண்ணப்பிக்க கூடிய மாணவ -மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடன் அக்கறைகொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை துறை சார்ந்தவர்கள் ஏதேனும் கல்விக்கடன் கிடைக்கப் பெறாமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கவனத்திற்கு கொண்டு வரலாம், மாணவச் செல்வங்களுக்கு கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால் கல்வி நிறுவனங்கள் மூலமாக நீங்கள் அணுகலாம் இல்லை

மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்வி கடன் பெறலாம் என தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவில்லை என வானதி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ள நிலையில், இது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிகடந்த ஆட்சியில் நடந்த குளறுபடிகள் காரணமாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் 2021 பதவியேற்ற பின்பு கோவை மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஒரு அரங்கத்தில் இருபத்தைந்தாயிரம் பயனாளிகளுக்கு வ உ சி மைதானத்தில் அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அமைச்சர் அவர்கள் கோவைக்கு வருகை தந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவாக அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என ஆலோசனை உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் விரைவாக முடிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். சட்டமன்ற தொகுதிக்கு ஏற்பட்ட குறைகள் இருந்தால் மாவட்டநிர்வாகத்திற்கு சொன்னால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், குளங்களை பொறுத்தவரை பணிகள் செய்கின்ற போது சமூக ஆர்வலர்கள் குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...