கோவை கிணத்துக்கடவு அருகே 'கொசிமா' தொழிற்பேட்டையில் நிலம் ஒதுக்கீடு பணி இன்று துவக்கம்..!

அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்க வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


கோவை:கோவை கிணத்துக்கடவு அருகே 'கொசிமா' தொழிற்பேட்டையில் நிலம் ஒதுக்கீடு பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கமான(COSIEMA) தொழில் அமைப்பு சார்பில், கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் கிராமத்தில் 'COSIEMA இண்டஸ்ட்ரியல் பார்க்' என்ற பெயரில் அமைக்கப்பட்டுவரும் தொழில் பூங்கா வளாகத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று துவங்கியுள்ளன. அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்க வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக கோவை நகருக்குள் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளை துவங்கவும் முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது.

இதன் காரணமாகதொழில்துறையினர் ஒன்றிணைந்து நகருக்கு வெளிப்புறங்களில் இடங்களை வாங்கி அங்கே தனியார் தொழிற்பேட்டைகளை அமைத்து வருகின்றனர்.இந்த வகையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கமான(COSIEMA) தொழில் அமைப்பு சார்பில், கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் கிராமத்தில் 'COSIEMA இண்டஸ்ட்ரியல் பார்க்' என்ற பெயரில் தொழில் பூங்கா ஒன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியுள்ளன.

'COSIEMA' தொழிற்பூங்கா' செயல் இயக்குனர் சுருளிவேல் மற்றும் இயக்குனர், நல்லதம்பி ஆகியோர் கூறியதாவது:-



நகர விரிவாக்கம் காரணமாக இட நெருக்கடி பிரச்சினை தொழில் துறையினருக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழில்துறையினர் 78 பேர் ஒன்றிணைந்து கிணத்துக்கடவு அருகே சொளவம்பாளையம் கிராமத்தில் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்தோம். முதல் கட்டமாக42 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். மொத்தம் 140 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

உள்ளூர் திட்ட குழுமம் உள்ளிட்ட அனைத்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. எதிர்வரும் நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கும் என நம்புகிறோம்.

தொழிற்பேட்டை வளாகம் முழுவதும் 100% தொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கினால், 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...