தெற்கு மண்டலம் வார்டு எண்.90 கோவைப்புதூர் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மக்கும் கழிவுகள் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட ஊர்கவுண்டர்தோட்டம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதனிடையே, மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.90 கோவைப்புதூர் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் (Micro Compostiong Center) மக்கும் கழிவுகள் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம் கோவைப்புதூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற இடங்களில் போக்குவரத்து சீராக செல்வதற்கு வசதியாக தார் சாலையை சரிசெய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.

மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.90க்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் .89 சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள உள்ளரங்கு உடற்பயிற்சி மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை - பாலக்காடு பிரதான சாலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம் சுகுணாபுரம் பகுதியிலுள்ள கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள கால்வாயை தூர்வாருவதற்கு திட்டமதிப்பீடுகள் தயார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, மாமன்ற உறுப்பினர்கள், உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.