கோவையில் தனியார் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு..!

பேருந்தின் பாதுகாப்பு அம்சம், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? அவசரகால வழி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். கோவையில் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1265 பேருந்துகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.



கோவை:பள்ளி கல்லூரிகளுக்கு ஆண்டு விடுமுறை முடிந்து, 2022 - 2023 ம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.



அதன்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பேருந்தின் பாதுகாப்பு அம்சம், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? அவசரகால வழி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. கோவையில் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1265 பேருந்துகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.



மேலும் அங்கேயே தனியார் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சில பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கதாக அமைந்தது.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...