பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'படித்த முட்டாள், மட்டரகமான அரசியல்வாதி' - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உண்டு, நாங்கள் மக்களுக்காக வேலை செய்கிறோம், மட்டரகமான அரசியல்வாதிக்கும், தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்கும், பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம், அண்ணாமலை படித்த முட்டாள் என தெரிவித்துள்ளார்.



கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் 19.70-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஓராண்டில் மட்டும் 198-கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மாநகராட்சி கோவிலில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் 113-கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், இன்று 38-கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாநகராட்சி விடுபட்ட சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டு, கூடுதல் நிதி களைப் பெற்று கோவை மாநகராட்சி பொறுத்தவரை அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட சாலைகள் முதல்வரின் ஆட்சியில் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது செந்தில் பாலாஜி என அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது எனவும், வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர்கள் ஏன் அரவகுறிச்சியில் மண்ணை கவ்வினார்? ஏன் மக்கள் விரட்டியடித்தார்கள்? என கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இப்போது கூட எடுக்கலாமே? நாங்கள் வேண்டாம் என்று கூறுகிறோம் எனக்கேட்டார்.

மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாறே எங்கிருந்து வந்தது? காவல் துறையில் சம்பளம் வாங்கி சம்பளத்தை சேர்த்து வைத்து, அல்லது ஆடு மாடு மேய்த்து சேர்த்து வைத்தா வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் என கேள்வி எழுப்பியதோடு எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது, நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் எனவும் நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் எனத் தெரிவித்தார்.

மேலும், 143-கோடி டாலருக்கு நிலக்கிரி குறைவான விலையில் நாங்கள் வாங்கியிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பிய அமைச்சர் நிலக்கரி குறைவான அளவு இறக்குமதி செய்யும் போது கூட தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவித்துள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் 39-வேட்பாளர்களும் மகத்தான் வெற்றியை பெறுவார்கள் எனவும், பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நீதிமன்றத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்ட தீ-விபத்தில் பெண், அணிலால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற வன உயிரினங்களால் மின்வெட்டு ஏற்படுமா ஏற்படாதா என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பினார்.

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உள்ளது எனவும், நாங்கள் மக்களுக்கு வேலை செய்கிறோம் எனவும், அண்ணாமலை வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார் எனவும், மட்டரகமான அரசியல்வாதிக்கு, தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், ஒன்னாம் நம்பர் படிச்ச முட்டாள் எனவும் கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...