அதிமுகவில் கோஷ்டிகள் இருந்ததில்லை, இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருப்பதாக கூறிய அவர், இருவருமே விபத்தில் பதவிக்கு வந்து விட்டனர் எனவே, இருவரும் ஒதுங்கி கொள்ளுங்கள், வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும் என தெரிவித்தார்.
கோவை: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சண்டையிட்டு கொள்வது சரியல்ல என கவுண்டம்பாளையம் தொகுதிஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி விளாங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன் என ஆரம்பித்த அவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருப்பதாகவும், ஆட்சியில் இருந்த போது பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் வழக்கு இருக்கின்றது என காரணம் சொல்லி உள்ளாட்சி தேர்தலைநடத்தாமல் இருந்ததாகவும் உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் ஆட்சி போயிருக்காது என தெரிவித்தார்.
இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர் என்றும், இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருப்பதாக கூறிய அவர் இருவருமே விபத்தில் பதவிக்குவந்து விட்டனர் என தெரிவித்தார்.
இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு இவர்கள் எதுவும் செய்யவில்லை என சாடினார்.
உள்ளாட்சி தேர்தலில்ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை என கூறினார். மேலும் கோவையில் வேலுமணி வார்டில் 2000 ஓட்டு அதிகம் வாங்கி திமுக ஜெயித்து இருக்கின்றது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக சாதி கட்சியாகப் போகின்றது என தெரிவித்தார். அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர் எனவும் கூறினார்.
ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் ஒதுங்கி கொள்ளுங்கள், வேறு யாராவது தலைமைப் பொறுப்பிற்கு வரட்டும் என தெரிவித்தார். ஜெயலலிதா இருந்தபோது இருந்தகட்சியாக தற்போதைய அதிமுகஇல்லை எனவும் அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம் என கூறினார்.
அன்வர் ராஜாவை ஏன் நீக்கினார்கள்? கட்சிக்காக பேசினால் நீக்கினார்கள் என கேள்வி எழுப்பிய அவர் பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள் எனவும், சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும் என கூறினார். மேலும், உன்னை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் 4 வருடம் அமைச்சர் அலுவலகத்துக்குச் சென்றால் உரிய மரியாதை இருக்காது எனவும், இவற்றை பொறுமையுடன் கடந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
வேறு யாராவது தலைமைப் பொறுப்பிற்கு வரட்டும் என தெரிவித்த அவர், இவர்கள்இருவருக்கும் கட்சியில்ஆதரவு இல்லை என தெரிவித்தார். அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி என தெரிவித்த அவர் இனி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
எனவே, தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். அதிமுக துரோக கட்சியாக மாறிவிட்டது, மேல் இருந்து கீழே வரை மாறி விட்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் கோஷ்டிகள் இருந்ததில்லை எனவும், இவர்கள்இருவரும் சுத்தமானவர்கள் இல்லை எனவும் தெரிவித்தார். எனக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் இல்லை என்றனர். என்னுடன் வேலுமணி பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன் என தெரிவித்த அவர், சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை, அனைவரும் சேர்ந்து யாரையாவது தேர்ந்து எடுங்கள், ஒற்றை தலைமை வரட்டும், இவர்கள் இருவரும் வேண்டாம் என தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும் எனவும், அதிமுக விவகாரத்தில் பிரதமர் தலையீட்டை ஒ.பி.எஸ் நேற்று வெளிப்படையாக பேசி இருக்க கூடாது என தெரிவித்தார்.
பா.ஜ.கவினர்கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர் என்பது உண்மைதான் எனவும் தெரிவித்தார். அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக இருந்து விட்டது எனவும், சசிகலா, தினகரனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோஷம் என கூறிய அவர், அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டதாகவும், வேறு கட்சியில் இருந்தும் அழைத்தும்போகவில்லை திமுகவில் இருந்து அழைத்தும்போகவில்லை என தெரிவித்தார்.
மேலும் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது, மாவட்ட தலைவர்கள் என தெரிவித்த அவர், அதிமுகவில் இருக்கிறேன் ஆனால் ஒ.பி்.எஸ்,இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை எனவும், இது போன்ற நிலை கட்சிக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் இப்போது வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.