கோவை சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் உட்பட 3-பேர் கைது: 2-கிலோ கஞ்சா பறிமுதல்..!

2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சூலூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் உட்பட 3-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் குமரன் கோட்டம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் போலீசாரை கண்டதும் தங்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.



முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் சூலூரை சேர்ந்த கார்த்திக் (24) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராஜ் (32), மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபி கான் (33) என்பதும், மூவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...