கோவை மாநகரில் கடந்த 2-நாட்களில் 12-இருசக்கர வாகனங்கள் திருட்டு..!

12 பைக்குகள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் நேற்று இரண்டு சக்கர வாகனம் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2 தினங்களில் 12 வாகனம்திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வி.கே.புதூர், எஸ்.ஆர் அவென்யூ பகுதியில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவர்சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.விடுமுறையை தொடர்ந்துசொந்த ஊருக்கு வந்தார். சொந்த வேலைக்காக வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.

அப்போது அவர் நிறுத்தி வைத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை யாரோ மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது அங்குபொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றிஇருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.

இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உட்பட பகுதிகளில் பைக், மொபட் திருட்டு போனது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த தந்த காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

கோவை மாநகரில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 12 பைக்குகள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...