உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த நபரை குணப்படுத்திய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..!

உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த நபரை குணப்படுத்திய கோவை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த நபரை குணப்படுத்திய கோவை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம்தோல் முழுவதும் உரிந்த நிலையில், திருப்பூர் மாவட்டம்உடுமலைப்பேட்டை எரிசனம்பட்டியை சேர்ந்த முருகவேல் (35), என்பவர் அனுமதிக்கப்பட்டு 45 நாட்கள் கழித்து தற்போது முழுவதும் குணமாகி வீடு திரும்புகிறார்.



இது குறித்துகோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும் போது:-

இந்த நோயின் பெயர் டாக்சிக் எபிடெர்மெல் நெக்ரோலைசிஸ் (Toxic Epidermal Necrolysis). இந்த நோய், மாத்திரை ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்றினால் ஏற்படும். உடலில் சிவப்பு கொப்பளங்கள் தோன்றி பின் தோல் உரிந்து வரும். வாய், ஆசனவாய் போன்ற இடங்களிலும் புண் ஏற்படும்.

தோல் முழுவதும் உரிந்து வந்த நிலையில், பிற கிருமிகளின் தொற்று ஏற்பட்டு, உள் உறுப்புகள் செயல் இழக்க நேரிடும். இதனால் 50 முதல் 80% இறப்பு நேரிட வாய்ப்புள்ள போதும், இந்த நிலையில் இவருக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள் அவரை தனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அரசாங்கத்தின் மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் வீடு திரும்புகிறார். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் நிலையில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த நோயாளிக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.



அதே போல் பொதுமக்கள் அனைவரும் மருத்துவர் ஆலோசனையின்றி வலி மாத்திரையோ, வேறு மாத்திரைகளையோ உட்கொள்ள கூடாது. தோலில் கொப்புளம், ஊறல், வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் பிரிவில் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நோயாளியின் உயிரை மீட்டுக் கொடுத்த தோல் பிரிவு தலைவர் Dr.முத்துக்குமரன் மற்றும் பிற மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவமனை முதல்வர் பாராட்டினார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...