பேருந்து அருகே வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பேருந்தின் பம்பரில் சிக்கியதாகவும், இதற்கும் ஓட்டுனருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து தொமுச தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கோவை: அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் கண்டித்து தொமுச தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (32), இவர் பேரூர் ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராணி (42) என்பவருடன், கோவை பெரியகடை வீதி எதிரே உள்ள தனியார் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது திடீரென மோகன்ராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென சரிந்து இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து பம்பரில்சிக்கி இருவரையும் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் புஸ்பராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மோகன்ராஜ் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் அஸ்வந்த்குமார் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தான் தவறி பேருந்து மீது விழுந்ததாகவும், இந்த விபத்தில் சம்பந்தமில்லாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி,இதனை கண்டித்து தொமுச போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் கூறும் போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியிருக்கிறது. பேருந்து அருகே வந்த இருசக்கர வாகனம் தவறி விழுந்து பேருந்து பம்பர் சிக்கியதாகவும், இதற்கும் ஓட்டுனருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் அரசு பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓட்டுநரின் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.