கோவை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கரடி நடமாட்டம்..!

தேயிலை தோட்ட கிளப்பில் சமையல் வேலை செய்யும் ஒருவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று இரவு வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆனைமலை கிளப் உள்ளது. இங்கு சேவியர் வயது 64 என்பவர் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 12-மணி அளவில் சமையல் வேலையை முடித்து விட்டு பின் பகுதியில் உள்ள கேட்டை மூடுவதற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த கரடி ஒன்று வேகமாக வந்து அவரை தாக்கியது.



இதில், வலது கையில் கடித்ததால் பலத்த காயம் அடைந்தார். அங்கு வேலை செய்தவர்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றி வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் 5-ஆயிரம் ரூபாய் வழங்கி பின்பு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...