கோவையில் அவசரம் கருதி 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஊழியர்கள்; குவியும் பாராட்டுக்கள்….!

கோவை - அன்னூர் நாச்சிபாளையம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்த காரணத்தால், அவசரம் கருதி அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்சு மருத்துவ குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை: கோவை - அன்னூர் நாச்சிபாளையம் அருகே அவசரம் கருதி கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பகுதி ஆம்போதி ஊராட்சி. ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி சரவணன் (25) மற்றும் துர்கா(23). இவர்களுக்கு திருமணமாகி இரு ஆண்டுகளான நிலையில் துர்கா கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து, நிறைமாத கர்ப்பிணியான துர்காவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவசர உதவி 108 எண்ணிற்கு சரவணா அழைத்துள்ளார்.



உடனே 108 ஊழியர்கள், நந்தகோபால், குமுதா உள்ளிட்டோர் விரைந்து வந்து நிறைமாத கர்ப்பிணியான துர்காவினை ஆம்புலன்சிஸ் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் நாச்சிபாளையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, துர்காவிற்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால், அவசரம் கருதி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடுவழியிலே வாகனத்தை நிறுத்தி, அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.



சரியாக இன்று காலை 10.20 மணிக்கு, துர்காவிற்கு அழகான ஆண் குழந்தை 2 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. பின்னர், தாய், சேய் இருவரையும் முதலுதவி சிகிச்சைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்த காரணத்தால், அவசரம் கருதி அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்சு ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...