சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்பு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை சர்ச் காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் – சகாயராணி, தம்பதியின் மகள் சவுமியா (13). இவர், குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறந்த முதல் நாள், சிறுமி சவுமியா பள்ளியில் இருந்த போது 11 மணியளவில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர்கள் சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், மயங்கிய சிறுமியை பள்ளி ஆசிரியர்கள்,பள்ளியின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தகவல் அறிந்து, மருத்துவமனைக்குபெற்றோர் வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென மாலை 4 மணிக்கு மேல் சிறுமிக்கு இதய துடிப்பு படிப்படியாக குறையத் துவங்கியதாக தெரிகிறது. ஆனால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறும் போது, சிறுமி எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. சிறுமி பள்ளியில் இருப்பதாக தெரிவித்தனர். மீண்டும் அழைத்த போது தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறினார்கள்.
குழந்தைக்கு பிரச்சனை என்றால் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிருந்தால் மகளை காப்பாற்றியிருக்கலாம். மேலும், அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர் என்று
குற்றம் சாட்டினர்.

இறந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியதால், குனியமுத்தூர் சரக உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா மற்றும் குனியமுத்தூர் போலீஸார் அங்கு வந்தனர். இதையடுத்து, உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து, முதல் நாள் பள்ளிக்கு வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.