பெற்றோர்களே, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காதீர்கள் - கோவை போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன்…!

கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, பொறுப்பேற்றுக் கொண்ட மதிவாணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவருக்கு பதிலாக நெல்லையில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதிவாணன், மாநகர துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இன்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, மதிவாணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: "கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது கண்காணித்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்", என்றார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட போக்குவரத்து துணை ஆணையாளருக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...