முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம்: அண்ணா பல்கலை மாணவ மாணவியர் அதிருப்தி

வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை, இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்வு எழுதினர்.

வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து கோவை மண்டல அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: நான்கு ஆங்குகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலையில் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2017ல் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின் 2022 இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதன் காரணமாகவே கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகிறது. மேலும், விவரங்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலை தேர்வு துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்", இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு தாமதம் குறித்துமுதலாமாண்டு மாணவ, மாணவியர் கூறுகையில், "வழக்கமாக முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். தற்போது, ஜூன் மாதம் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் தெரியவில்லை. முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முடிவுகள் கால தாமதமாகி வருவதால் மன சோர்வும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அண்ணா பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைத்து மாணவ மாணவியரின் எதிர்பார்ப்பாகும்",

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...