கோவை வால்பாறையை சுற்றி பார்க்க வந்த கேரள மாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி..!

பாறை இடுக்கில் கால் சிக்கி கொண்டதால் வெளியே வர முடியாமல் மனைவி குழந்தைகள் கண் எதிரே நீரில் மூழ்கி பலியானார்.


கோவை: வால்பாறையை சுற்றி பார்க்க வந்த கேரள மாநில வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.

அதை போல் வால்பாறையைச் சுற்றிப் பார்க்கக் கேரளா மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வந்த மன்சூர் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இரண்டு குடும்பத்தாரும் வால்பாறைக்கு நேற்று மாலை வந்தனர்.

தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். இன்று மதியம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். அதில் மன்சூர் என்பவர் ஆற்றில் குளிப்பதற்கு தண்ணீரில் குதித்து உள்ளார்.

தண்ணீர்க்குள் பாறை இடுக்கில் கால் சிக்கி கொண்டதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி மனைவி குழந்தைகள் கண் எதிரே நீரில் மூழ்கி பலியானார். பின் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



உடல் கிடைக்காததால் வால்பாறை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள். உடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டும் காலேஸ்வரன் என்பவரை அழைத்து வந்து தண்ணீரில் மூழ்கியவரைக் கைப்பற்றினர்.



வால்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. சந்தோஷமாகச் சுற்றுலா வந்த இடத்தில் ஒருவர் இறந்ததால் குடும்பம் துக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...