கோவை கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..!

கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



கோவை நகர் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு 238 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம், கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவரத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.



கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி ஆர் நடராஜன், சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அம்மன் அர்ஜுனன், கேஆர்.ஜெயராமன், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.



கவுண்டம்பாளையம் பகுதி மேம்பால திறப்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...