திருப்பூரில் 'என் குப்பை என் பொறுப்பு' - உறுதிமொழியுடன் தூய்மைப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைப்பு..!

தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் என் குப்பை என் பொறுப்பு உறுதிமொழியுடன் தீவிர தூய்மைப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மைப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப்பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தூய்மை பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிமொழி வாசித்து துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திக்குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.

அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.



சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...