கோவை தனியார் நர்சிங் கல்லூரியில் 109 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – சுகாதாரத்துறை கண்காணிப்பு….!

அபிராமி நர்சிங் கல்லூரி விடுதியில், கடந்த 4 நாட்களாக அடுத்தடுத்து மாணவிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விடுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை எல்என்டி நெடுஞ்சாலையில் உள்ள அபிராமி நர்சிங் கல்லூரியில், சுமார் 900 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகின்றனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 10 மாணவிகளுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மாணவிகள் சுந்தராபுரம் பகுதியில் உள்ள அந்த கல்லூரிக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், அடுத்தடுத்து மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுவரை சுமார் 109 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 31 மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



இதுதொடர்பாக, கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அருணா, தலைமையிலான மதுக்கரை வட்டார சுகாதார அலுவலர், அழகு ராஜலட்சுமி உள்ளிட்ட சுகாதார குழுவினர் விடுதியில் முகாமிட்டு மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், கோட்டாட்சியர் மற்றும் மதுக்கரை வட்டாட்சியர் ஆகியோர் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. அதே போல், கல்லூரி விடுதி வளாகத்தில் மருத்துவ குழுவினர் சக மாணவ, மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், விடுதி மற்றும் உணவகத்தில் பயன்படுத்தும் குடிநீர், உணவு, மற்றும் மாணவிகள் இறுதியாக உட்கொண்ட உணவு பொருட்களின் மாதிரிகளை சுகாதரத்துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். அதே போல், கல்லூரி வாளகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலென்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இது குறித்து, நர்சிங் மாணவி ஒருவரை பெற்றோர் கூறும் போது, "ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவிகளை சொந்த ஊர்களுக்கு செல்ல அறுவுறுத்தி வருகின்றனர். திடீரென உடல் நலகுறை ஏற்பட்டுள்ளது, ஆனால் இது குறித்து தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.

எனது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதிக்கு வந்தாலும், தற்போதும் பாதிப்பு உள்ளதாக கூறுவதால் அச்சமாக உள்ளது. உடனடியாக பிரச்சனைக்காக காரணத்தை கண்டறிய வேண்டும்" எனக் கூறினார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...