கோவையில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை…!

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ். இவர் பீளமேடு விகே சாலை ஜீவா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று லியோ மரியா இருதயராஜ் தனது அலுவலகத்தில் இருந்த போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான இடைத்தரகர் ரவிக்குமார் என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரவிக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடு கத்தியால் லியோ மரியா இருதயராஜ் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் இருதயராஜ் படுகாயமடைந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். லியோ மரியா இருதயராஜ் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருதயராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச்சென்ற ரவிக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

முதல்கட்டமாக துவங்கிய விசாரணையில் ரவிக்குமார் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள, நிலையில் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...