கோவையில் பட்டப்பகலில் கோவில் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரால் பரபரப்பு..!

யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் இந்தி மொழியில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் அக்கோவில் பகுதியில் வந்த வடமாநில நபர் ஒருவர் கோவிலை நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே சென்று கோவிலின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் எல்லை ரோந்து பணி காவலர்கள் அந்த வடமாநில நபரிடம் விசாரணை நடத்தினர்.



யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் இந்தி மொழியில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...