கோவை குறிச்சியில் ரூ.6-கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு…!

கோவை குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொங்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30-சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை குறிச்சியில் ரூ.6-கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொன்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து அங்கு போத்தனூர் போலீசார் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள் வருவாய் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.



இதற்காக அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர் பின்னர் கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலின் பரம்பரை அறங்காவலர் இடம் ஒப்படைக்கப்பட்டது.



மேலும் 30 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...