தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 19 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் கோவை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.
கோவை: அம்பேத்கர் மற்றும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையில் மானிய கோரிக்கை அடிப்படையில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 19 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் கோவை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.

இதில், 11 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்ற நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதன்படி, பூ.சா.கோ சர்வஜனா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் முதல் பரிசையும், கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஆஷாவி காசினி இரண்டாம் பரிசையும், பூ.சா.கோ கிருஷ்னம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இனியவள் மூன்றாம் பரிசினை பெற்றனர்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசினை பொன்னாக்கானி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி திரிஷலா, வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி காயத்திரி ஆகியோர் பெற்றனர்.
அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், அரசு சட்டக் கல்லூரி மாணவி சுமித்ரா முதல் பரிசையும், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் மாணவி ஆர்த்தி இரண்டாம் பரிசினையும், ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் இராபின் ஜோஸ்வா மூன்றாம் பரிசை பெற்றனர்.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சர்மிளா முதல் பரிசையும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் தீபக் இரண்டாம் பரிசையும், நிர்மலா மகளிர் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு (கணிதம்) பயிலும் மாணவி பிரகதி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 5000 ரூபாய், இரண்டாம் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 2000 ரூபாய் மற்றும் அரசு பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு பரிசு 2000 ரூபாய் காசோலையினையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.