மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.65க்குட்பட்ட சிவராம் நகரில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
கோவை: கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 மற்றும் 37க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை TNSUDP திட்டத்தின்கீழ் ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும் தார் சாலை பணியின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.65க்குட்பட்ட சிவராம் நகரில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், இன்று (09.06.2022) பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 மற்றும் 37க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (TNSUDP) ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும் தார் சாலை பணியின் தரத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னா் ஆணையாளர் தெரிவித்ததாவது, “தற்போது 2.300 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மகேஸ்வரி நகர் முதல் விளாங்குறிச்சி வரையில் 2.9 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 27X7 குடிநீர் திட்டம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் கேஸ் பைப் லைன் அமைக்கும் பணியினை ஒருவார காலத்திற்குள் முடிக்கவும், பணிகளை துரிதபடுத்தி வெகு விரைவாக தார்சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். தார் சாலை அமைக்கும் பணியினை தரமாகவும் விரைவாகவும் செய்து முடித்திடச் சம்பந்தப்பட்ட பொறியாளாகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கிழக்கு மண்டல தலைவர் இலக்கும் இளஞ்செல்விகார்த்திக், பணிகள் குழுத்தலைவர் சாந்திமுருகன், மண்டல உதவி ஆணையர்கள் சங்கர், மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி மேகநாதன் உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனர்.