கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் பொதுவழி ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

பொதுவழியில் கட்டப்பட்ட, ஆட்டு கொட்டகை மற்றும் கான்கிரிட் கழிப்பறைகளை, மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையில், மதுக்கரை வட்டாச்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.



கோவை: கோவை திருமலையாம்பாளையம் ரொட்டிகவுண்டனூர், அர்ஜூனா காலனியில் பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில், லூர்துமேரி என்பவர் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன் சிறிய வீடு ஒன்றை கட்டி வசித்து வந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டிற்குச் செல்லும் பொது வழியை மறித்து, அதே பகுதியை சேர்ந்த ராஜம்மாள் மற்றும் ரத்தினா ஆகியோர் ஆட்டுக்கொட்டகை மற்றும் கான்கிரிட் கழிவறைகளை கட்டி பொதுவழியை ஆக்கிரமித்து வந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிய நிலையில், தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இதையடுத்து தூர்லுமேரி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.



இதையடுத்து, மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன், இன்று மதுக்கரை வட்டாச்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.



மேலும், 5 நாட்களுக்கு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...