திமுகவுக்கு மூடுவிழா நடத்தும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது-கோவை பொள்ளாச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் பேட்டி..!

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை புத்தர் போல் காண்பித்து, மக்களுக்காகப் போராடுவது போல் நடித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.



சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்ன திமுக, தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி இன்னும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எப்படி குற்றச்சாட்டுக்கள், ஊழல்கள் இருந்ததோ அதற்கு மேலாக திமுக ஆட்சியில் உள்ளது என்றும், மக்களின் நண்பனாக இருப்பதாக கூறிய திமுக, தற்போது மக்களுக்கு விரோதியாக மாறி உள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...