கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப. இன்று (07.06.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப. இன்று (07.06.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99, 100-க்கு உட்பட்ட மேட்டூர், ஈஸ்வரன் செட்டியார் வீதி, கணேசபுரம், கோணவாய்க்கால்பாளையம் ஆகிய இடங்களில் தலா ரூ.15.00 லட்சம் வீதம் ரூ.60.00 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் சிமெண்ட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஓராண்டு காலத்திற்குள் முடிக்கும் பொருட்டு, கூடுதல் பணியாளர்களை நியமித்தும், கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தியும், குப்பைகளை பிரித்து அனுப்பிட வேண்டும் என ஆணையாளர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, வெள்ளலூரில் ரூ.168 கோடியில் மதிப்பீட்டில் 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.45க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கிய பின்னர்,

பேருந்து நிலையத்திலுள்ள பொதுக் கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடத்தை ஆய்வு செய்து, பொதுமக்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்திட ஏதுவாக பராமரிக்கப்பட வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையிலும், தரமானதாகவும் வழங்கப்படுகிறதா என்பதையும், அங்குள்ள உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து,

மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்.மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை பார்வையிட்ட பின்னர்,

ரூ.49 கோடி மதிப்பீட்டில் சங்கனூர் பள்ளம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் (பொ) இராமசாமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மேற்கு மண்டல உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் பாஸ்கர், கருப்பசாமி, இராமசாமி, ஹேமலதா, சுகந்தி மாமன்ற உறுப்பினர்கள் மு.அஸ்லாம் பாஷா, இரா.கார்த்திகேயன், பேபிசுதா ரவி, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4-க்கு உட்பட்ட சரவணம்பட்டி பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் கழிவுநீரை உடனடியாக அகற்றும் படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல்சாமி, சிவா என்கின்ற பழனிச்சாமி, பூங்கொடி ஆகியோர் உள்ளனர்.