திருப்பூரில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு!

திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


திருப்பூர்: திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.



பின்னர் இந்த ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.



ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக இன்று திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் இங்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் 33 தலைப்புகளில் (துறைகளில்) கேள்விகள் கேட்கப்பட்டது. தெளிவான விளக்கங்கள் அளிக்காத ஒரு சில துறை அதிகாரிகளை வரும் 16ஆம் தேதி சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டுகளில் வெள்ளகோவில் நகராட்சி நிதியை வங்கி கணக்கில் இருப்பு வைக்கும் போது டெபாசிட் செய்து வைக்காமல் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 லட்சம் வரையிலான வட்டி இழப்பானது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்கும்படி நகராட்சி ஆணையரை வரும் 16ம் தேதி சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் முறையான சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. மேலும் அந்த விடுதியில் குறைந்த அளவிலான பெண்கள் இருந்து வருகின்றனர். அந்த விடுதி அங்கு கட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் இதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு செய்து அங்கு விடுதி கட்டப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...