கோவை தடாகம் அருகே மார்பு பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

கோவையில் பெரிய தடாகம் அருகிலுள்ள வனப்பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பெரிய தடாகம் அருகிலுள்ள வனப்பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை வனச்சரகம் பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதிக்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் காட்டு மாடு ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், கோவை வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காட்டு மாட்டிற்கு வயிற்று பகுதியில் காயம், உடல் மெலிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



இதையடுத்து சுகுமார் தலைமையில் அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந்திருந்த காட்டு மாட்டுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.



வயிற்று பகுதியில் உள்ள காயம் சுத்தம் செய்யப்பட்டு மருத்து போடப்பட்டது. இதையடுத்து மாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உள்ளிட்ட மருந்து ஊசிகள் போடப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது: சுமார் 8 வயதுடைய காட்டு மாட்டிற்கு மார்பு 20 செ மீ ஆழத்திற்கு காயம் ஏற்பட்டு, மார்பு அருகே புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முதல்கட்டமாக காயம் உள்ள பகுதிகள் தூய்மை செய்யப்பட்டு கட்டுப்போடப்பட்டுள்ளதாகவும், தற்போது உடல்நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு மற்றும் வைட்டமின் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குளுக்கோஸ் செலுத்தப்பட்டதுடன் நீர் அருந்த கொடுத்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...