கோவையில் முகத்தில் பலத்த காயத்துடன் தவித்து வந்த ஆதரவற்ற மூதாட்டி பத்திரமாக மீட்பு - பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்..!

கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டியை, மீட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த பந்தய சாலை உதவி ஆய்வாளர் சைனபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டியை, பந்தய சாலை போலீசார் மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள சாலை ஓரத்தில் மூதாட்டி ஒருவர் முகத்தில் பலத்த காயமடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. மூதாட்டியின் பரிதாபமான நிலைமையை பார்த்த பொதுமக்கள் சிலர், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் வந்த பெண் உதவி ஆய்வாளர் சைனபா, மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவர் கோவை அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்த சாமுவேல் என்பவரது மனைவி தனலட்சுமி (56). என்பதும், உறவினர்கள் யாரும் இல்லாததால் ஆதரவற்று நீண்ட காலமாக கிடைக்கும் உணவை சாப்பிட்டு சாலை ஓரத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன்னார்வலர்கள் உதவியுடன் மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டுவரும் ஆஞ்சநேயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டிக்கு, சிகிச்சை அளித்து அங்கேயே அவர் பராமரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து உடனடியாக சென்று, மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த பந்தய சாலை உதவி ஆய்வாளர் சைனபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...