மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21-கிலோ கஞ்சா, ரூ.2-லட்சம் ரொக்கம், 2- இருசக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 17-வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை துடியலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக துடியலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கஞ்சாவை பயன்படுத்திய சில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணை அடிப்படையில் கோவை சரவணம்பட்டி, சூலூர் பள்ளபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பிரதீப் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விருதுநகரை சேர்ந்த லக்குச்சாமி (28), அஜித்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் சூலூரில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 17 வயது சிறுவன், மற்றும் லக்குசாமி, அஜித்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2 லட்சம் ரொக்கம், 2 இரு சக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட லக்குசாமி மீது 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் அஜித் குமார் மீது இருசக்கர வாகனம் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மூவரையும் போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.