ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் யானையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டது!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் யானையின் மண்டையோடு உள்ளிட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் யானையின் மண்டையோடு உள்ளிட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் வனப்பகுதியில், வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக - கேரள எல்லை வாய்க்கால், நம்பர் 1 பகுதியில் யானையின் தலை எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, உலாந்தி வனச்சரகர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்காலில் வந்த தண்ணீரை நிறுத்தி பார்த்த பொழுது யானையின் தலை எலும்புக்கூடாக இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும், அதன் அருகில் யானையின் உடலில் எலும்பு துண்டுகளும் இருந்துள்ளது. இதை சேகரித்த வனத்துறையினர் இறந்த யானை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய, எலும்பு பாகங்களை மரபணு பரிசோதனைக்கு சென்னை ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு விசாரணை தொடங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...