மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் - ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி கோவையை சேர்ந்த தம்பதி தற்கொலை!

மகன் தற்கொலை கொண்ட சோகம் தாங்காமல் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கோவையைச் சேர்ந்த தம்பதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மகன் தற்கொலை கொண்ட சோகம் தாங்காமல் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கோவையைச் சேர்ந்த தம்பதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் இருவர் சடலமாக மிதந்தனர். இதனைக் கண்ட பக்தர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடலில் மிதந்த இருவரது சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் கூறுகையில், இறந்தவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் (62) கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், அவரது மனைவி தனலட்சுமி (59) காதிகிராப்டில் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது. கடந்த 3ம் தேதி கோவிந்தராஜூம், அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களது 23 வயது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர் அதில், "தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும், அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி, ராமேஸ்வரம் காவல்துறையினர், கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தம்பதியினர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இருவரது உடலையும் காவல்துறையினர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...