கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை!

கோவை துடியலூர் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை துடியலூர் ராக்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (44). தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்கு சென்றார். சம்பவத்தன்று அவரது வீட்டின் அருகே உள்ள குணசேகரன் என்பவர் தனசேகரனின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் தனசேகரனுக்கு தகவல் அளித்துள்ளார். இதைக்கேட்டு அவர் உடனே பெருமாநல்லூரில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்பட 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...