ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன் கணவரின் வீட்டை அபகரித்ததாக கூறி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன் கணவரின் வீட்டை அபகரித்ததாக கூறி மனைவி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன் கணவரின் வீட்டை அபகரித்ததாக கூறி மனைவி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் வசித்து வருபவர் அன்னமேரி. இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய ராணுவ படை வீரர் என்ற தகுதியின் அடிப்படையில் அன்னமேரியின் கணவருக்கு சுமார் 2600 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது.

அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி 35 ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீட்டின் உரிமை உத்தரவு நகல், வரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் கார்டு அனைத்தும் கணவர் பெயரில் உள்ள சூழ்நிலையில் என் கணவர் கடந்த 2015ஆம் ஆண்டு உயரிழந்துவிட்ட நிலையில் தற்போது தங்களுக்கு அறிமுகமில்லாத ஜெபமாலை மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் எனது கணவர் உயிரோடு இருக்கும் போது கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனுக்காக வீட்டை விற்று விட்டதாகவும் ஆவணங்களை போலியாக தயாரித்து தன்னையும் தன் குடும்பத்தையும் உடனடியாக காலி செய்ய வற்புறுத்தி வருவதாகவும் கூறி கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

எனது மனுவை நில அபகரிப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து ஜெபமாலையின் மகன் கார்த்திக் தங்களை காலி செய்ய வற்புறுத்துவது, அவமரியாதையாக பேசி வருவது, தங்கள் வீட்டில் ஆங்காங்கே கேமராவை வைத்து அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்.



இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அன்னமேரி குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...